சென்னை ஜன, 26
பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். பல சிறப்பான பாடல்களை தன்னுடைய தந்தை, மற்றும் அண்ணன் மற்றும் தம்பி இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல அழகான பாடல்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் பவதாரிணி. இவரது மயக்கும் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் கட்டுண்டு இருந்தனர். சில படங்களுக்க இசையமைக்கவும் செய்துவந்த பவதாரிணி நேற்றைய தினம் உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது கணவர் ஓட்டல் பிசினஸ் செய்துவந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனிடையே தற்போது இசைஞானி இளையராஜாவும் இலங்கையில்தான் உள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் இலங்கை சென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1995ம் ஆண்டு முதல் பின்னணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் ஆக்டிவாக செய்லபட்டுவந்த பவதாரிணி, தன்னுடைய மயக்கும் குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். பாரதி படத்திற்காக கடந்த 2001ம் ஆண்டில் பவதாரிணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து மனம் மயக்கும் ஏராளமான பாடல்களை பாடிவந்த பவதாரிணி, இசையமைப்பாளராகவும் மித்ர மை பிரெண்ட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது அடுத்தடுத்து 3 படங்களுக்கு இசையமைத்து வந்த பவதாரிணி உயிரிழந்துள்ளார்.
பவதாரிணிக்கும் சபரிராஜ் என்பவருக்கும் திருமணமான நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. பவதாரிணியின் கணவர் ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். தற்போது இளையராஜாவும் இலங்கையில்தான் உள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் இலங்கை சென்ற நிலையில் மகளின் உயிரிழப்பு குறித்து விஷயம் அறிந்த இளையராஜா தற்போது மகளுடன் உள்ளார். இவரது இசைநிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரு தினங்கள் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
பவதாரிணியின் உடல் நாளை மாலை சென்னை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராசய்யா படம் மூலம் கோலிவுட்டில் பாடகியாக தன்னுடைய தந்தையின் இசையில் அறிமுகமானவர் பவதாரிணி. தொடர்ந்து தன்னுடைய சகோதரர்கள் இசையிலும் தேவா, சிற்பி உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இசையிலும் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான வாய்சிற்கு சொந்தக்காரரான பவதாரிணி இந்த இளம் வயதில் உயிரிழந்தது குறித்து பலரும் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.