புதுச்சேரி ஜன, 21
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.