சென்னை ஜன, 21
மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசன் விரும்புவதாக கூறப்படும் நிலையில், கோவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்க உள்ள கமல், அதன் பிறகு தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.