மதுரை ஜன, 22
பிரம்மாண்டமாக மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி திறந்து வைக்கிறார். ஜனவரி 24 அன்று போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அந்த மைதானத்தில் களம் காண 9,000 காளைகளும், 3,300 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.