திருப்பூர் ஆகஸ்ட், 24
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை வழியாக வாகனங்கள் செல்ல மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதனையடுத்து சிறு குறு தொழில் துறையினருடன் கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.