திருப்பூர் ஆகஸ்ட், 20
தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொட்டித்தீர்த்த மழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையின் நடுவே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும் அதிகமாக மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து
மழை நீரானது குளம் போல் காணப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் என பலரும் சிரமத்திற்குள்ளானர்.