திருப்பூர் ஆகஸ்ட், 15
இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. பலவகையான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.