சென்னை ஜன, 19
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்தினம்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஷால், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அடுத்த வருடம் இந்த கூட்டணியில் இயக்குனராக நானும் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் துப்பறிவாளன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.