சென்னை ஜன, 13
உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் டிசம்பர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள உச்சபட்ச வரம்பான 6 சதவீதத்திற்குள் உள்ளது. நான்கு மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த பணவீக்கம் டிசம்பரில் அதிகரித்துள்ளது. நவம்பரில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 5.5% ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.