பாகிஸ்தான் டிச, 11
பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரஃப்புக்கு தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2007 இல் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை முஷரப் அறிவித்து அரசியலமைப்பு சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைத்தார். இது தொடர்பாக தேச துரோக வழக்கில் 2019ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது இவ்வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கடந்தாண்டு முஷ்ரப் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.