துபாய் ஜன, 6
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பு மற்றும் துபாய் காவல் துறையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் நைஃப் காவல் நிலையம் இடத்தில் நடைபெற்றது.
இம்முகாம் நைஃப் காவல்துறை உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் டாக்டர் தாரிக் முஹம்மது தாலக் வழிக்காட்டுதலில், காவல்துறை துணை இயக்குனர் உமர் அசூர் மற்றும் ஈமான் அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் மக்கள் தொடர்பு செயலாளர் இம்தாதுல்லா ஒருங்கிணைப்பில் சிறப்பு விருந்தினராக அன்வர் குழுமம் நிறுவனர் அன்வர்தீன் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, யல்லா தமிழ் ராவூப் மற்றும் குழுவினர் மேலும் பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை ஈமான் நிர்வாகிகள், ஹாஜா அலாவுதீன், சேக், சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், நஜீம் மரிக்கா, ஹமீது, அஸ்கர், ஷாஹுல் ஹமீது, மற்றும் ஈமான் அங்கத்தினர் இணைந்து செய்திருந்தனர். மேலும் தன்னார்வலர்களான மண்ணை சுரேஷ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.