சென்னை ஜன, 10
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசாக தரப்பட உள்ளது. இதற்காக இரண்டு நாட்களாக டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.