விருதுநகர் ஜன, 3
புத்தாண்டு தொடங்கியுள்ளதையடுத்து சிவகாசி அச்சாலைகளில் சுமார் 400 கோடி மதிப்பிலான காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வியாபாரம் செய்வோர் என பலரும் விளம்பரத்திற்காக காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த ஒரு மாத காலமாக இரவு, பகலாக நடைபெற்று வந்த அச்சடிக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.