கீழக்கரை ஜன, 3
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்தாண்டு KLK வெல்ஃபேர் கமிட்டி என்னும் பெயரில் சமூக நல அமைப்பு உதயமாகியது. சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அவைத்தலைவராகவும்,MKE உமர் கௌரவ ஆலோசகராகவும் MMK முகைதீன் இப்றாகீம் சட்ட ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் ஷாகுல்ஹமீது ஆலிம் தலைவராகவும்,ஜஹாங்கீர் அரூஸி செயலாளராகவும், ஹாஜி உமர் அப்துல் காதர் களஞ்சியம் மற்றும் செய்யது அபுதாஹிர் துணை தலைவர்களாகவும்,ஹாஜி ஷஃபீக் பொருளாளராகவும்,மூர் ஹஸனுதீன் இணைசெயலாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கமிட்டியின் இரண்டாமாண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(01.01.2024)மாலை 5 மணிக்கு ஜின்னாதெரு செய்யதுல் ஹஸனாத் பள்ளியில் அவைத்தலைவர் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி இமாம் செய்யது இப்றாகீம் உலவி கிராத் ஓதி துவக்கி வைத்தார்.பொதுக்குழு உறுப்பினரும் சமூக நல ஆர்வலருமான அஜிஹர் வரவேற்புரையாற்றினார்.பொருளாளர் ஹாஜி ஷஃபீக் வரவு செலவினை தாக்கல் செய்தார்.செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆண்டறிக்கை வாசித்தார்.
தலைவர் ஷாகுல்ஹமீது ஆலிம்,கௌரவ ஆலோசகர் MKE உமர் ஆகியோர் கருத்துரை வழங்கினார். அவைத்தலைவர் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையுரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்:-1) கமிட்டியின் பெயரை மாற்றம் செய்வது.
தீர்மானம்:-2) கீழக்கரையில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:-3) ஊரில் பரவி வரும் டெங்கு,மலேரியா,வைரஸ் போன்ற காய்ச்சல்களை கட்டுப்படுத்தும் விதமாக ஊர் முழுவதும் கொசு மருந்து அடிப்பது பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற சுகாதார பணிகளை அதிகரிக்குமாறு நகராட்சியை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:-4) பெருகி வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துமாறு நகராட்சியை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:-5) காலை நேரத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊரின் சாலைகளை அடைக்கும் குடிநீர் லாரிகள்,டிராக்டர்கள் மற்றும் குடிநீர் வாகன நேரங்களை வரையறுக்கும் வகையில் திட்டமிடக்கோரி நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:-6) மாணவர்கள்,இளைஞர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தையும்,கீழக்கரை காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:- 7) போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் முயற்சிகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு கொடுத்து வரும் கீழக்கரை நகராட்சிக்கு நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம்:- இனிவரும் அடுத்து ஓராண்டு வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து தெருக்களிலும் தெருமுனை கூட்டங்களாக நடத்த தீர்மானிக்கிறது.
மேலும் இக்கூட்டத்தில் UHMS மூத்த உறுப்பினர் ஹமீது பாரூக், ஹாஜா ஜலாலுதீன், நிஸ்பர், நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, கவுன்சிலர்கள் சக்கினா பேகம், காயத்ரி,கொட்டியார் அப்துல் காதர், காமில், ஆபிது அலி, சீனிமுகம்மது, ஜாஹிர் ஹுசைன்,நெய்னா முகம்மது, கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகி சித்தீக், தாஜுல் அமீன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கிர் அரூஸி.//மாவட்ட நிருபர்.