மதுரை ஜன, 1
தேமுதிக தலைவர் விஜயகாந்த் க்கு முழு உருவச்சிலை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு சிலை அமைக்க முதல் நபராக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அமைச்சர்களிடம் ஆலோசித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.