சென்னை ஜன, 1
அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பின் மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை முடிக்க வேண்டும் என்றும், நாளை அல்லது நாளை மறுநாள் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.