நெல்லை டிச, 25
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக பாட புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் புத்தகப் பைகள் வழங்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.