சென்னை டிச, 25
தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறிப்பாக 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டது. இதில் ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட கொடுமைகள் இருப்பது தெரியவந்துள்ளது.