சென்னை டிச, 31
அயலான் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.அயலான் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன். அதற்கு அவரும் ஓகே. நான் ரெடி சொல்லிவிட்டேன். இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டுமே எடுக்க முடியும். அதனால் முதல் பாகத்துக்கு மக்களிடம் இருந்து வரும் வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளேன் என ரவிக்குமார் கூறியுள்ளார்.