சென்னை டிச, 29
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார். நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை 7:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து நேரடியாக தீவுத்திடலுக்கு சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.