திருச்சி டிச, 29
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி விமானத்தில் வருகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 1.05க்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர எல்லைக்குள் வருகிற இரண்டாம் தேதி வரை 6 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார்.