சென்னை டிச, 25
அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உதயநிதி, நிர்மலா சீதாராமனிடம் கையேந்துவது போல கார்ட்டூன் வெளியிட்டது அப்பத்திரிகை.