திருச்சி டிச, 25
திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விமான நிலையம் இணையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடி செலவில் 75,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவாயில் மற்றும் 12 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக ஜனவரி 2ம் தேதி விமான மூலம் திருச்சி வருகிறார் மோடி.