சென்னை டிச, 21
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து, இன்று நேரடியாக தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பின்னர் நெல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.