சென்னை டிச, 21
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காலியாக உள்ள 232 உதவி பேராசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளில் விண்ணப்ப நடைமுறையில் அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே அனைத்து குளறுபடிகளையும் சரி செய்து காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.