சென்னை டிச, 21
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது விக்ரமின் 62 வது படமான இதை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு திருத்தணியில் தொடங்க உள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.