Spread the love

மதுரை டிச, 17

மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸா வெளியிட்டுள்ள அறிக்கை.

இன்ஷா அல்லாஹ் 17:12:2023 ஞாயிற்றுக்கிழமை

இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை ,

டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 80 பார்வையற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில்

⏺️ சிறு,சிறு சூராக்களை தஜ்வீது முறைப்படி ஓதும்பயிற்சியளித்து

⏺️ தொழுகையை முறையாக தொழுவதற்கு பயிற்சியளித்து

⏺️ இறைவனின் அருட்கொடைகளை எடுத்துக் கூறி

⏺️ தன்நம்பிக்கையுடன்

தன்மானத்துடன், சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மக்களிடம் கையேந்தாமல் இறைவனிடம் மட்டும் கையேந்துங்கள் என்று இறைநம்பிக்கையை பலப்படுத்துதல்*

ஆகிய நிகழ்வுகள் ஒன்றிணைந்த பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார்கள் இந்நிகழ்வின் இறுதியில் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பார்வை மாற்று திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தர் மற்றும் பிரயாண செலவுகள் வழங்கி இதற்கு உபகாரிகளாக இருந்த மக்களுக்கு துஆ செய்யப்படும்.

இச்செய்தியை காணும் நல் உள்ளங்கள் அவசியம் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கின்றோம்.

செலவு விபரம் :

இந்நிகழ்ச்சியின் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு பார்வையற்றவருக்கு ரூ 3000 வீதம் 80 x 3000 = ரூ2,40,000 மாத மாதம் செலவிடப்படுகிறது இந்நிகழ்ச்சிக்காக எங்கும் சென்று பொது வசூல் செய்வதில்லை மக்கள் விரும்பி அனுப்பும் உபகாரங்களையும் பற்றாகுறைக்கு கடன் பெற்றும் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம் இச்செய்தியை காணும் நல்லுள்ளங்கள் தங்களால் இயன்ற அளவு இந்த செலவுகளை பொறுப்பெடுத்து நன்மைகளிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இந்த சேவைகளில் பார்வையற்றவர்களுக்கு பணிவிடை செய்ய ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகவும் இந்நிகழ்ச்சியில் கலந்து பணிவிடை செய்து இறை பொறுத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்

அல்ஹம்துலில்லாஹ்!!

தொடர்பு எண் : 9095729213 8973854134

முகவரி :

ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான், (பார்வையற்றோர் மத்ரஸா) , அரசு பதிவு எண் 131/2017) , கதவு எண்: 1/309, அழகர்கோவில் ரோடு, மாத்தூர் பிலால் நகர், செட்டிகுளம் ரோடு, மதுரை – 625301.

இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்ய வங்கி விபரம் JAMIA EHSAANUL UMYAN TRUST, CURRENT A/C NO: 0890102000018276 ,IDBI BANK, BYPASSROAD(BRANCH) IFSCODE- IBKL0000890 MADURAI-16.

என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *