சென்னை டிச, 15
எண்ணூர் முகத் துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுனர்கள் கூட இன்று சென்னை வருகிறது. ட்ரோன் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் சென்னை ஐஐடி குழு ஏற்கனவே அங்கு ஆய்வை மேற்கொண்டது. இதுவரை அங்கு 7600 லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக எண்ணெய் படலத்தை டிசம்பர் 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.