சென்னை டிச, 14
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட அலட்சிய போக்கு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்ந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதே நாளில் மற்றும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. நான்கு கட்ட பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட ஏற்பாடுகளை மீறி தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.