சென்னை டிச, 13
சென்னையில் மழை நீர் வடிகால்களை சீர் செய்ய தமிழக அரசு ரூ.4000 கோடி நிதி ஒதுக்கியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனுடைய வெள்ள பாதிப்பில் சென்னை சிக்கிய நிலையில் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இது தொடர்பாக பேசிய கே. எஸ் அழகிரி “அரசு ரூ.4000 கோடி செலவு செய்ததா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது அது கணக்கு தணிக்கையில் தெரியவரும்” என்றார்