நெல்லை ஆகஸ்ட், 22
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் தங்கபாண்டியன், துணை தலைவர் முரளிதரன், மாவட்ட நகர்மன்ற தலைவர் கனகராஜ், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் கோவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.