சென்னை டிச, 12
நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவில் தன்னுடைய 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரஜினிகாந்த். தொடர்ந்து தன்னுடைய ஸ்டைல், உழைப்பு ஆகியவற்றால் சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார்.
70 ஆண்டுகளை கடந்தும் ஒருவரால் ஹீரோவாகவே தொடர முடியும் மற்றும் ரசிகர்களை தக்க வைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படத்தில் சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் பெரிய அகலமான கேட்டை திறப்பது போன்ற காட்சியில் அவர் என்ட்ரி கொடுத்திருப்பார். அதுதான் அவரது பிரகாசமான சினிமா பயணத்திற்கான முன்னோட்டமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை கே பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்நிலையில் அவரது நன்மதிப்பை பெற்ற ரஜினி தொடர்ந்து அவரது படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய ரஜினிகாந்த், இன்னும் இரு ஆண்டுகளில் தன்னுடைய 50 வருடங்களை சினிமாவில் பூர்த்தி செய்யவுள்ளார். கேரக்டர் ரோல், வில்லன் என நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திய ரஜினிகாந்த், 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்னும் ஹீரோவாகவே தன்னுடைய சிறப்பான நடிப்பு, ஸ்டைல் போன்றவற்றால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ரஜினிகாந்த் குறித்த மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்களையும் தன்னுடைய ஸ்டைல், நடிப்பு போன்றவற்றால் கவர்ந்தவர் ரஜினிகாந்த், தற்போது அவர் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரை காட்டிலும் அவரது பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். அவரது பிறந்தநாளில் பல சிறப்பான செயல்களை அவரது ரசிகர்கள் ஒருபுறம் திட்டமிட்டுவரும் நிலையில் மறுபுறம் சமூக வலைதளங்களில் அவரது பிறந்தநாளையொட்டி CDP வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
இந்த CDPயில் ரஜினியின் ஜெயிலர் பட கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். மேலும் படையப்பா உள்ளிட்ட மற்ற படங்களின் போஸ்டர்களும் கட்அவுட்களாக இந்தப் CDPயில் காணப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை ஸ்டைல் டே என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியை ஸ்டாருக்குள் அடக்கி மகிழ்ந்துள்ளனர் ரசிகர்கள். சூப்பர்ஸ்டார் என்று இந்த காமன் டிபியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கழுகையும் பறக்கவிட தவறவில்லை.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது காக்கா, கழுகை சேர்த்து குட்டிக்கதை ஒன்றை பகிர்ந்திருந்தார் ரஜினி. இந்தக்கதையில் தன்னுடைய சூப்பர்ஸ்டார் பட்டத்தை யார் அடைய நினைத்தாலும் குழுகுடன் காக்கா ஒன்றாக முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கதையில் அவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள காமன் டிபியில் கழுகையும் ரசிகர்கள் சேர்த்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது