சென்னை டிச, 11
திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வடிகால் பணிகளை தணிக்கை செய்தாலே அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும். அரசு அதிகாரிகள் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கோபத்தை காட்டுவதை திமுக அரசு விட்டு நிவாரண பணிகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.