சென்னை டிச, 8
மிக்ஜாம் புயல் காரணமாக மாநில அரசு கேட்டுள்ள முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். “கடந்த சில காலமாகவே தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மாநில அரசுகள் கேட்கும் நிவாரணத் தொகை ஒதுக்கப்படுவதில்லை. குறைவான அளவிலேயே நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. உடனடியாக முழு தொகையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.