நெல்லை ஆகஸ்ட், 22
இலவச பேருந்தில் பள்ளி மாணவிகளை நடத்துனர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், பள்ளி கல்லூரி நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரியும் பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கையில்,
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊரில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு 3 பேருந்து செயல்பட்டு வந்தது தற்போது 1 பேருந்து மட்டுமே வருகிறது. இதனால் சிரமமாக உள்ளது என கூறினர்.
மேலும் கடந்த 11 ம் தேதியன்று அரசு பேருந்து ஓட்டுனர் ஒரு பள்ளி மாணவியை பள்ளி செல்கிறீர்களா அல்லது மாடு மேய்க்க செல்கிறீர்களா என அசிங்கமாக பேசியுள்ளார். ஆகவே அந்த மாணவி பள்ளிக்கு ஒருவாரமாக பள்ளிக்கு செல்லவில்லை என்றும் இலவச பஸ் என்று தானே எங்களை இந்த நடத்துனர்கள் அவமதிக்கின்றனர் காசு கொடுத்தே பள்ளிக்குசெல்கிறோம். இலவசபேருந்து வேண்டாம் என்றும், பள்ளி செல்ல சரியான நேரத்தில் பஸ் வேண்டும் என்றும், கிருஷ்ணாபுரம் முதல் பாளை வரை பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு கூடுதலாக பேருந்து வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.