காபூல் டிச, 11
பெண் கல்விக்கு தாலிபன் அரசு விதித்து வரும் தடையை ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அப்பாஸ் விமர்சித்துள்ளார். காபூலில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய அவர், “பெண்கள் கல்வி கற்க வேண்டும் அவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். இது கடவுள் அவர்களுக்கு வழங்கிய உரிமை. அண்டை தேசங்கள் நம்மை விட்டு தூரமாக இருப்பதற்கும் கல்வி பிரச்சனை தான் காரணம் அது தீர்க்கப்பட வேண்டும் என்றார்.