சென்னை டிச, 10
தென் கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.