தூத்துக்குடி டிச, 10
தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், கோவை கருத்தம்பட்டிக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தூத்துக்குடிக்கும், நாங்குநேரி காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் தஞ்சைக்கும், கருமத்தம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் தையல்நாயகி விழுப்புரத்திற்கும், திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணா ஈரோட்டுக்கும், ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் திருவாரூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.