சென்னை டிச, 6
சென்னை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனா நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசு 4000 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறியது. ஆனால் சென்னை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. 4000 கோடி ஒதுக்கீட்டில் குறைபாடு இருப்பதாக நான் கருதுகிறேன். மேலும் மழை வெள்ளத்தை அரசியலாக விரும்பவில்லை என்றார்.