காஞ்சிபுரம் டிச, 3
மிச்சாங் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆனது 5-ம் தேதி காலை நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிக்சாங் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் கொண்ட குழு மாங்காடு பகுதிகளுக்கும், மீதமுள்ள 25 பேர் கொண்ட குழு காஞ்சிபுரம் பகுதியிலும் பணியில் ஈடுபட உள்ளனர்.