ராமநாதபுரம் டிச, 2
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓரிரு தினங்களில் புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, குமரி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவே வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.