கீழக்கரை டிச, 2
டிசம்பர் 3 ம் தேதி மிக்ஜம் புயல் வருவதாகவும், அதன் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கீழக்கரை கடற்கரை பாலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சியினை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் துவக்கி வைத்தார். கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் பேரிடர் மீட்பு தொடர்பான ஆலோசனை வழங்கினார்.
எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் சமூக ஆர்வலர் அஜிஹர் ஆகியோர் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர் துணை தலைவர் ஜலீல்,காவல்நிலைய காவலர் ராம்கி,தலையாரிகள் சரவணன், பாண்டி, மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஜுபைர் ஆபிதீன்,மகளிரணி நிர்வாகிகளான முபினா, ஜன்னத்து மசூதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை நகர் செயலாளர் காதர் ஏற்பாடு செய்திருந்தார்.நிறைவாக முன்னாள் துணை தலைவர் ரீஹான் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் ஆருஸி.
மாவட்ட நிருபர்.