ஆந்திரா டிச, 2
வங்க கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வரும் 5 ம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.