சென்னை டிச, 2
நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 55 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்த கையெழுத்து நீட் விலக்கு பெறுவதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.