சென்னை டிச, 3
மெட்ரோ ரயில் இன்று ரூபாய் ஐந்து கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை க்யூ ஆர் கோடு பயண சீட்டு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற பயண சீட்டுகளுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சலுகை டிசம்பர் 17ம் தேதியும் இதேபோன்று கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.