ராய்ப்பூர் டிச, 1
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியின் முடிவு இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.