சென்னை டிச, 1
ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் அதிக மாநிலங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அந்த கணிப்பு உண்மையானால் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இந்தியா கூட்டணியில் தங்கள் இருப்பை அதிகப்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கும் என்பதை கள யதார்த்தம்.