சென்னை நவ,30
தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்று உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உடனடியாக களத்துக்கு சென்று பணியாற்றுமாறும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.