அரியலூர் நவ, 30
அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணிமேரி ஸ்வர்டணா கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பெயர்ச்சி மையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா பரிசுகள் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன், சமூக நல அலுவலர் பூங்குழலி, தாசில்தார் ஆனந்தவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.