புதுடெல்லி நவ, 29
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன விற்பனை 19% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வாகன விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் இதுவரை 38 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.